
இறக்குமதி தேங்காய், பாம் எண்ணெய் மீதான விசேட பண்ட வரி நீக்கப்படும்
இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் மற்றும் பாம் எண்ணெய் மீதான விசேட பண்ட அறவீட்டை நீக்கி அதற்கு பதிலாக பெறுமதி சேர் வரி உட்பட பொதுவான வரிக் கட்டமைப்பை விதிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
இந்த முன்மொழிவானது 2025 ஏப்ரல் மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் முன்மொழியப்பட்டுள்ளது.
35.1 இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் மற்றும் பாம் எண்ணெய் மீது பெறுமதி சேர்வரி மற்றும் சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு அறவீட்டை விதித்தல்
உள்ளூர் உற்பத்திகளானது பெறுமதி சேர் வரிக்கும் சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு அறவீட்டுக்கும் உட்படுத்தப்படும் அதேவேளை, இறக்குமதி செய்யப்படுகின்ற தேங்காய் எண்ணெய் மற்றும் பாம் எண்ணெய் 01 கிலோ கிராமுக்கு முறையே ரூபா 150 மற்றும் ரூபா 275 என விசேட பண்ட அறவீட்டுக்கு உட்படுத்தப்படுகின்றன.
சமமான போட்டி நிலையை உறுதிப்படுத்துவதற்கு இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் மற்றும் பாம் எண்ணெய் மீதான விசேட பண்ட அறவீட்டை நீக்கி, அதற்குப் பதிலாக பெறுமதிசேர் வரி உட்பட பொதுவான வரிக் கட்டமைப்பை விதிப்பதற்கும் முன்மொழிகின்றோம். இம் முன்மொழிவு 2026 ஏப்ரல் மாதத்திலிருந்து அமுலுக்கு வரும் வகையில் முன்மொழியப்படுகின்றது.

