பாதுகாப்பற்ற புகையிரத கடவைக் காப்பாளர்களின் கொடுப்பனவு அதிகரிப்பு

பாதுகாப்பற்ற புகையிரத கடவைக் காப்பாளர்களின் கொடுப்பனவு அதிகரிப்பு

பாதுகாப்பற்ற புகையிரத கடவைக் காப்பாளர்களின் கொடுப்பனவை அதிகரிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. 

தற்போது 8 மணிநேரம் கடமை நேரத்திற்கு வழங்கப்படும் 7,500 மாதாந்த குறைந்தபட்ச கொடுப்பனவை 15 ஆயிரம் ரூபாயாக அதிகரித்து வழங்குவதற்கு 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

33.10 பாதுகாப்பற்ற புகையிரத கொடுப்பனவை அதிகரித்தல் கடவைக் காப்பாளர்களின்
பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள் காரணமாக வருடாந்தம் குறிப்பிடத்தக்க தொகையிலான உயிரிழப்புகள் ஏற்படும் அதேவேளை அவற்றினால் நிரந்தர அங்கவீனத்திற்கு ஆளாகின்றவர்களும் குறிப்பிடத்தக்க அளவினராகும்.

இந்நிலைமைக்கு தீர்வாக தற்போது சுமார் 1,000 கடவைக் காப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு தற்போது எட்டு மணி நேர கடமை நேரத்திற்கு வழங்கப்படும் மாதத்திற்கு ரூபா 7,500 குறைந்தபட்ச கொடுப்பனவை ரூபா 15,000 வரை அதிகரித்து வழங்குவதற்கு ரூபா 250 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு நாம் முன்மொழிகின்றோம்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )