
10 வருடங்களுக்கு பிறகு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகம் வந்த நாமல் மற்றும் குழுவினர் 21 நுகேகொடையில் பேரணி தொடர்பில் கலந்துரையாடல்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாமல் ராஜபக்ஷ மற்றும் அந்த கட்சியின் ஒரு குழுவினர் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்திற்கு வருகை தந்தனர்
தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவுள்ள பொதுக் கூட்டம் குறித்து விவாதிக்க அவர்கள் வருகை தந்தனர்
துமிந்த திஸாநாயக, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ , டீ வீ சாணக்க , சஞ்சீவ எதிரிமான ஆகியோர் நாமல் ராஜபக்ஷவுடன் வருகை தந்தனர்.
மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, அதன் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் பலர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சுதந்திரக் கட்சி தலைமையகத்திற்கு வருகைதந்திருக்கிறீர்கள் இல்லையா? என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவிடம் ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு நாமல் ராஜபக்ஷ பதிலளித்தார்.
“பேரணி குறித்து கலந்துரையாட வந்தேம் .
அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் .
முந்தைய வரவு செலவு திட்டத்தில் கூறப்பட்ட 50% கூட செயல்படுத்தப்படவில்லை.
ஆனால் ஜனாதிபதி 4 1/2 மணி நேரம் பேசுகிறார். 1700 கெப்களை யாருக்காக ? அவற்றை கேட்ட நிறுவனம் எது ?
கெப் வாகனம் கேட்டவர்களை நாம் தேடுகின்றோம்.. அரசாங்கம் சிலரை மகிழ்விக்க விரும்புகிறது . அரசாங்கம் பொய் சொல்கிறது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். ஐஸ் போதைப்பொருள் தொடர்பாக என்னைக் கைது செய்ய முயன்றனர்.
ஆனால் பெலவத்தையில் அரசாங்கம் சரிந்து. விட்டது.
பிக்பாக்கெட் கோட்பாட்டின் அடிப்படையில் அரசியல் செய்கிறது.
அந்தக் கருத்திற்கு ஆதரவு வழங்கும் அனைவரும் 21 ஆம் திகதி நுகேகொடைக்கு வருவார்கள். 21 பேரணிக்கு மஹிந்த ராஜபக்ஷ வரமாட்டார். ஆனால் அவரது ஆசீர்வாதம் எப்போதும் உண்டு.””
என நாமல் ராஜபக்ஷ பதிலளித்தார்.
, “ஜனநாயகத்திற்காக அனைத்துக் கட்சிகளும் ஒரே மேடையில் உள்ளன. திசைகாட்டிக்காக முட்டாள்தனமாகச் செயல்பட்டவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளனர். இந்தப் பொய்யை 21 ஆம் திகதி அம்பலப்படுத்துவோம்” என ஊடக சந்திப்பில் துமிந்த திஸாநாயகே தெரிவித்தார்.

