
உக்ரேன் டிரோன்களை சுட்டு வீழ்த்திய ரஷ்யா
ரஷ்யா-உக்ரேன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இன்று (25) அதிகாலை ரஷ்யா மீது உக்ரேன் டிரோன் தாக்குதலை நடத்தியது. தலைநகர் மாஸ்கோவை குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த டிரோன்களை நடுவானில் இடைமறித்து ரஷ்யா அழித்தது. இது தொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறும் போது,
“இன்று அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 100 உக்ரைன் டிரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டது. மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் 4 மணி நேரத்திற்குள் 95 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
தலைநகர் மாஸ்கோவை குறிவைத்து ஏவப்பட்ட டிரோன்களும் அழிக்கப்பட்டன. மத்திய நகரமான துலாவிலும், மாஸ்கோவின் வடமேற்கே உள்ள ட்வெர் நகரத்திலும் வான் பாதுகாப்பு பிரிவுகள் டிரோன்களை சுட்டு வீழ்த்தியது.“ என்று தெரிவித்தது.
CATEGORIES World News

