
இலங்கை தபால் சேவை ஊடாக புதிய பிறப்பு சான்றிதழைத் தபாலில் அனுப்பும் திட்டம் ஆரம்பம்
இலங்கை தபால் குரியர் சேவை ஊடாக புதிய பிறப்பு சான்றிதழைத் தபாலில் அனுப்பும் முறையான திட்டம் இன்று (12) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் இலங்கை தபால் குரியர் சேவை ஊடாக தேசிய பிறப்பு சான்றிதழை தபாலில் அனுப்பும் முறையான திட்டமொன்றை பொது நிருவாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன வின் தலைமையில் கம்பஹா மாவட்டத்தை மையமாக வைத்து இன்று (12) காலை 8.00மணிக்கு கம்பஹா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

