
பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கிரிபத்கொடையில் உள்ள அரசாங்க நிலத்தை போலி பத்திரங்களை தயாரித்து விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கு தொடர்பில் இவ்உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

