“Lanka Ride 2025”  வரலாற்றில் முதல் முறையாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சினால் துவிச்சக்கரவண்டி சவாரி

“Lanka Ride 2025” வரலாற்றில் முதல் முறையாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சினால் துவிச்சக்கரவண்டி சவாரி

​இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, லேக்ஹவுஸ் நிறுவனம், விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் மற்றும் சைக்கிள் ஓட்ட நடுவர் சங்கம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்யும் ‘Lanka Ride 2025’ துவிச்சக்கரவண்டி சவாரி தொடர்பில் அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே மற்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன ஆகியோரின் தலைமையில் நேற்று ( 12) இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சில் நடைபெற்றது.

​துவிச்சக்கரவண்டி சவாரி டிசம்பர் 18 அன்று லேக்ஹவுஸ் நிறுவனத்தின் முன்பாகத் தொடங்குகிறது. ஆரம்ப நாளில் ஏழு கிலோமீட்டர் தூரம் இலவச ஓட்டத்திற்கு (Free Ride) அனுமதிக்கப்படுகிறது.

பின்னர், பேலியகொட பொலிஸ் நிலையத்தின் முன்பாக போட்டி ஆரம்பிக்கப்பட்டு, அங்கிருந்து கண்டி – கனோர்வை வரை 106 கி.மீ தூரம் ஓட்டப்படும்.

இரண்டாவது நாளில் (டிசம்பர் 19) கண்டி அங்கிருந்து தம்புள்ளை வழியாக 136 கி.மீ ஓடி அனுராதபுரத்தை அடைவார்கள். மூன்றாவது நாளில் (டிசம்பர் 20) அனுராதபுரத்தில் இருந்து புத்தளம் வீதி வழியாக 208 கி.மீ தூரம் ஓடிய பின், கொழும்பு சுதந்திர சதுக்கத்தின் (Independence Square) முன் போட்டி நிறைவடையும்.

​முதல் இடத்தைப் பெறும் வெற்றியாளருக்கு ரூபா 6 இலட்சமும், இரண்டாவது இடத்திற்கு ரூபா 5 இலட்சமும், மூன்றாவது இடத்திற்கு ரூபா 4 இலட்சமும், அத்துடன் 25வது இடம் வரை போட்டியை நிறைவு செய்யும் ஓட்டவீரர்களுக்கும் பணப் பரிசுகள் வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.

​அத்துடன், 23 வயதுக்குட்பட்ட சிறந்த இளம் துவிச்சக்கரவண்டி ஓட்ட வீரருக்கு ரூபா 2 இலட்சமும், சிறந்த மலை ஏறுபவருக்கு (King of the Mountain) ரூபா ஒரு இலட்சமும், புள்ளிகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்படும் சவாலான பகுதிகளை வெல்பவர்களுக்கு (Sprint Winners) ரூபா ஒரு இலட்சமும், சிறந்த துவிச்சக்கரவண்டி அணிக்கு ரூபா 2 இலட்சமும், சிறந்த உப வெற்றியாளர் அணிக்கு ரூபா ஒரு இலட்சமும் பணப் பரிசாக வழங்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

​வீரர்கள் குழுக்களாகப் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், ஒரு துவிச்சக்கரவண்டி அணியில் அதிகபட்சம் 6 வீரர்களும், குறைந்தபட்சம் 4 வீரர்களும் இடம்பெற வேண்டும். விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி டிசம்பர் 12 ஆகும்.

​இந்நிகழ்வில் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வி.

பிரேமச்சந்திரா, சைக்கிள் ஓட்ட நடுவர் சங்கத்தின் தலைவர் உபுல் சந்தன, வர்த்தகநாம ஊக்குவிப்பு முகாமையாளர் தர்ஷ சந்திரசிறி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )