ஐ.தே.க – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன இடையே சந்திப்பு

ஐ.தே.க – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன இடையே சந்திப்பு

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்களுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருக்கும் இடையில் நேற்று (12) விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. 

கொழும்பு ஃப்ளவர் வீதியிலுள்ள முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகத்திலேயே இச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

நுகேகொடையில் எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. 

வாக்குறுதிகளை வழங்கியவாறு அதனை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை விடுத்து கெப் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பிலேயே கவனம் செலுத்தியுள்ளது.

எனவே அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்கும் வகையில் இந்த எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்படும்.

இதில் ஐக்கிய தேசிய கட்சியும் தமது பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்ப்பதாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )