யாழில் போதை மாத்திரைகளுடன் மூவர் கைது

யாழில் போதை மாத்திரைகளுடன் மூவர் கைது

 யாழ்ப்பாணத்தில் போதைப் பொருட்களுடன் குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.

இந் நிலையில் நேற்று (13) யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பொலிஸார் யாழ்ப்பாணம் கொக்குவில் கலட்டிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 20, 21, 22 வயதுடைய இளைஞர்கள் மூவர் 50 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )