
4 கோடி ரூபாய் குஷ் போதைப்பொருள் கட்டுநாயக்கவில் பறிமுதல்
4 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள குஷ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பரிசோதனைகள் முடிவடைந்ததன் பின்னர் , விமான நிலையத்திலிருந்து வெளியேறும் போதே இந்த மூன்று பயணிகளையும் , விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு கைது செய்ததாகக் கூறப்படுகிறது.
சந்தேக நபர்களின் பைகளில் 4 கிலோகிராம் 22 கிராம் குஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
சந்தேக நபர்கள் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து கட்டுநாயக்கவிற்கு வந்ததாகவும் கொழும்பு மற்றும் வெல்லம்பிட்டியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
CATEGORIES Sri Lanka

