
யாழில் இம்முறை உயர்தர பரீட்சையின் பின்னர் உயிரியல்பாடவிடைத்தாளை அனுப்ப மறந்த அதிகாரிகள்
தற்போது நடைபெற்று வரும் கல்வித் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நிலையங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் நெல்லியடியில் உள்ள பிரபல பாடசாலையொன்று செயற்பட்டு வருகின்றது .
இந்நிலையில் அங்கு உயிரியல் பாடத்தை எழுதிய மாணவர்களின் முதலாம் பகுதி விடைத்தாள்களை ,பரீட்சை நேரம் முடிவடைந்ததும் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் முறையாக மேற்பார்வை அதிகாரிகளிடம் துள்ளனர் .
எனினும் அதிகாரிகள் அவற்றை திருத்தற் பணிகளுக்கு அனுப்ப மறந்துள்ளதாக யாழ் செய்தி ஊடகத்தில் கூறப்பட்டுள்ளது.
இலங்கையின் கல்வித்துறை வரலாற்றில் இவ்வாறான கவனக்குறைவு ஏற்பட்டமை இதுவே முதல் முறை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சையில் மாணவர் பெரும் ஒரு புள்ளி கூட வாழ்க்கையை தீர்மானிக்கும் நிலையில் அதிகாரிகளின் கவனக்குறைவினால் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்போது, குறித்த பரீட்சை மையத்தில் 21 மாணவர்கள் உயிரியல் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர் .
மாணவர்கள் முறைப்படி கையளித்த விடைத்தாள்கள் அன்றையதினமே உயரிய பாதுகாப்புடன் திருத்தல் பணிகளுக்காக அனுப்பப்பட வேண்டும்.
ஆனால், பரீட்சை நிலையத்தில் கடமையாற்றியவர்களின் கவனக் குறைவால் அவை திருத்தல் பணிகளுக்காக அனுப்பப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று நாள்களின் பின்னர் சென்று பார்த்தபோதே, அந்த விடைத்தாள்கள் காகிதங்களுடன் கட்டப்பட்டு இருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.
தற்போது அந்த விடைத் தாள்களை, திருத்தல் பணிகளுக்காக அனுப்ப முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதால் மாணவர்களின் பெறுபேறுகள் தொடர்பில் சர்ச்சைகள் எழுந்துள்ளன.
இந்த விடயம் தொடர்பில் கல்வித் திணைக்களத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அந்தப் பரீட்சை மத்திய நிலையத்தில் கடமையாற்றியவர்கள் அங்கிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவர்களுக்கு எதிராகத் திணைக்கள ரீதியான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாவும் யாழ் செய்தி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன

