முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில், முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று (23) அறிவித்துள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த விடயம் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, நீதவான் நீதிமன்றில் நிலுவையில் இருந்த வழக்கு நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவந்த நீதவான், கொழும்பு மேல் நீதிமன்றத்திலிருந்து அழைப்பாணை கிடைக்கும் போது நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு சந்தேகநபரான சாமர சம்பத் தசநாயக்கவிற்கு உத்தரவிட்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )