5000 இலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம்

5000 இலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம்

2026 ஆம் ஆண்டுக்குள் ஜப்பானிய மொழிப் பயிற்சி கற்கை நெறியை நிறைவு செய்த 5,000 இலங்கையர்களைக் கொண்ட ஒரு குழுவை உருவாக்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) எதிர்பார்ப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஜப்பானில் தொழிவாய்ப்பிற்காக இலங்கையர்களை ஆட்சேர்ப்பு செய்த நிறுவனங்களின் தலைவர்கள் குழு நேற்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் உயர் நிர்வாகத்தைச் சந்தித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தனர்.

தலைவர்கள் குழு நாட்டிற்கு வருகை தந்ததன் முக்கிய நோக்கம், இலங்கையில் இருந்து அதிகமான தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதும் ஜப்பானிய வேலைகளை மேம்படுத்துவதுமாகும்.

2026 ஆம் ஆண்டுக்குள் ஜப்பானிய மொழிப் பயிற்சி நெறியை நிறைவு செய்த 5,000 இலங்கையர்களைக் கொண்ட ஒரு குழுவை உருவாக்கவும், சுமார் 1,000 பேரை ஜப்பானிய IM நிறுவனம் ஊடாக ஜப்பானுக்கு அனுப்ப வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் இணைந்து ஒரு புதிய திட்டத்தை உருவாக்கவும் பணியகம் நம்பிக்கை கொண்டுள்ளதாக கோசல விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

ஜப்பானில் அதிகமானோர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், மொழிகள் மற்றும் திறன்களில் தேர்ச்சி பெற்ற இலங்கையர்களின் குழுவை உருவாக்க மாவட்ட அளவில் பயிற்சி திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )