
சீரற்ற வானிலையால் இதுவரை 47பேர் உயிரிழப்புஆயிரக்கணக்கானவர்கள் முகாம்களில்
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 47பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நேற்றும் இன்றும் மாத்திரம் இயற்கை அனர்த்ததால் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
அனர்த்த நிலைமை காரணமாக 21 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
1729 குடும்பங்களைச் சேர்ந்த 5,893 பேரும் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தில் நிலச்சரிவு காரணமாக 23 பேர் உயிரிழந்துள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன தெரிவித்தார்.
கண்டியின் கங்கொட பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக சுமார் 20 பேர் காணாமல் போயுள்ளனர்.
இதுவரை காணாமல் போன மூன்று பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தில் மண்சரிவு காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீரற்ற காலநிலையினால் நுவரெலியா மாவட்டத்தின் 10 பிரதேச செயலாளர் பிரிவுகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

