
தெஹிவளை துப்பாக்கிச் சூடு ; சந்தேகநபரை கைது செய்ய பொது மக்களின் உதவி கோரல்
தெஹிவளை பிரதேசத்தில் கடந்த டிசம்பர் 30ஆம் திகதி, 16 வயது சிறுமி மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில், சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட நபர் இவரே என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
‘அருமதுர சமீர சில்வா’ என அழைக்கப்படும் சந்தேகநபர் தொடர்பான தகவல்கள் இருப்பின், 071-8596408 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவு நிலையப் பொறுப்பதிகாரிக்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
CATEGORIES Sri Lanka

