ஜனாதிபதி அஸ்கிரி மகாநாயக தேரரை சந்தித்தார்

ஜனாதிபதி அஸ்கிரி மகாநாயக தேரரை சந்தித்தார்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (06) முற்பகல் அஸ்கிரி மகா விகாரைக்குச் சென்று, அஸ்கிரி தரப்பின் மகாநாயக அதி வணக்கத்திற்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரரைச் சந்தித்து ஆசி பெற்றார்.

தற்போதைய அனர்த்த நிலைமை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து ஜனாதிபதி அஸ்கிரி மகாநாயக தேரரிடம் விளக்கியதுடன் உரையாடலிலும் ஈடுபட்டார்.

பின்னர், ஜனாதிபதி அஸ்கிரிய தரப்பின் அனுநாயக அதி வணக்கத்திற்குரிய நாரம்பனாவே ஆனந்த அனுநாயக தேரரை சந்தித்து, சிறிது நேரம் உரையாடினார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )