
களனி பிரதேச செயலகப் தாழ் நில பகுதிகள் அடுத்த சில மணி நேரங்களில் நீரில் மூழ்கும் மக்கள் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தல் தங்குமிடங்கள் குறித்த அறிவிப்பு
அடுத்த சில மணி நேரங்களில் களனி ஆற்றின் நீர்மட்டம் மேலும் உயரக்கூடும் என எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் களனி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மேவெல்ல, பெத்தியகொட, சிங்கரமுல்ல, பேலியகொட கங்கபத, வெலேகொட, ஹுணுபிட்டிய வடக்கு மற்றும் ஹுணுபிட்டிய தெற்கு ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
களனி ரஜ மஹா விஹாரையில் உள்ள – விஹார மஹா தேவி யாத்திரை மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு தங்குமிடங்களை நோக்கி உடனடியாக செல்லுமாறு களனி பிரதேச செயலாளர் ஜே.ஏ.டி.ஜி.எஸ். ரணசிங்கமக்களை வலியுறுத்தியுள்ளார்.
அங்குள்ள சில பகுதிகள் தற்போது வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக களனி பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு தங்குமிடங்கள்
❗ குருகுல கல்லூரி
❗ ஸ்ரீ தர்மலோக கல்லூரி,
❗ எச்.கே. தர்மதாச உயர்நிலைப் பள்ளி
❗ ஸ்ரீ ஜயதிலகராம விகாரை
❗ வெதமுல்ல மகா வித்தியாலயம்
❗ துடுகெமுனு மகா வித்தியாலயம்
❗ வெலிபாறை விகாரை
அபாய நிலையில் இருக்கும் மக்கள் உடனடியாக இந்த பாதுகாப்பு தங்குமிடங்களை நோக்கிச் செல்லுமாற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, களனி பிரதேச செயலகப் பிரிவில் 4,000 குடும்பங்களைச் சேர்ந்த 21,000 பேர் அனர்த்த நிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது,

