மீட்பு பணிகள் நடைபெறும் பகுதிகளில் ட்ரோன் பறக்கவிட தடை

மீட்பு பணிகள் நடைபெறும் பகுதிகளில் ட்ரோன் பறக்கவிட தடை

மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ட்ரோன்களை பறக்கவிடுவதில் இருந்து விலகுமாறு பொதுமக்களுக்கு இலங்கை விமானப்படை அறிவுறுத்தியுள்ளது.

உரிய அனுமதிகள் இன்றி பறக்கவிடப்படும் ட்ரோன்கள், அத்தியாவசிய மீட்பு மற்றும் அவசர தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் விமானப் பயணங்களுக்கு பாதகமான சூழ்நிலைகளை உருவாக்கக்கூடும் என்று விமானப்படை எச்சரித்துள்ளது.

மேலும், அனைத்து வகை ட்ரோன் புறப்பாடு மற்றும் தரையிறக்க நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை கீழ்க்கண்ட தொலைபேசி எண்களுக்கு முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் எனவும் விமானப்படை தெரிவித்துள்ளது:

  • 011–2343970
  • 011–2343971
  • அவசர சேவை – 115

மீட்பு நடவடிக்கைகள் தடையின்றி நடைபெற பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு விமானப்படை கேட்டுக்கொண்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )