
நுவரெலியாவில் 21 வெளிநாட்டவர்கள் விமானப்படையினரால் மீட்பு
நுவரெலியா பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கினால் இடம்பெயர்ந்திருந்த 21 வெளிநாட்டவர்கள், நேற்று இலங்கை விமானப்படையின் துரித மீட்புக் குழுவினால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
அனுராதபுரம் விமானப்படை தளத்தைச் சேர்ந்த 06 ஹெலிகொப்டர் படைப்பிரிவின் MI-17 ஹெலிகொப்டர் மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த மீட்புப்பணியின்போது, பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக கட்டுநாயக்க விமானப்படை தளத்துக்கு அழைத்துவரப்பட்டனர்.
CATEGORIES Sri Lanka

