சூறாவளி தாக்கத்தைக் கருத்திற் கொண்டு வரி செலுத்துவோர் டிசம்பர் 31, 2025 அல்லது அதற்கு முன்னர் செலுத்துமாறு அறிவிப்பு

சூறாவளி தாக்கத்தைக் கருத்திற் கொண்டு வரி செலுத்துவோர் டிசம்பர் 31, 2025 அல்லது அதற்கு முன்னர் செலுத்துமாறு அறிவிப்பு

‘தித்வா’ சூறாவளி தாக்கத்தைக் கருத்திற் கொண்டு வரி செலுத்துவோர் டிசம்பர் 31, 2025 அன்று அல்லது அதற்கு முன்னர் செலுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரிக்கு பதிவுசெய்யப்பட்ட அனைத்து நபர்களும் நவம்பர் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன் வருமான வரி வருமானத்தை சமர்ப்பிக்கவில்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் அறிவிப்பு திருத்தப்பட்டுள்ளது

இது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்ட திணை.க்களம் , பாதகமான வானிலை நிலைமைகளைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறியுள்ளது.

2017 ஆம் ஆண்டின் 24 ஆம் எண் உள்நாட்டு இறைவரிச் சட்ட விதிகளின்படி, 2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான அனைத்து நபர்களும் தங்கள் வருமான வரி வருமானத்தை நவம்பர் 30, 2025 அன்று அல்லது அதற்கு முன் தாக்கல் செய்ய வேண்டும்திணைக்களம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் , வரி செலுத்துவோர் 2024/2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை டிசம்பர் 31, 2025 அன்று அல்லது அதற்கு முன்னர்செலுத்தினால் செய்தால், அபராதம் விதிக்காமல், அல்லது குற்றவியல் நடவடிக்கைகளை திணைக்களம் மேற்கொள்ளாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இதுவரை வருமான வரியை செலுத்த முடியாத அனைத்து வரி செலுத்துவோரும் இந்த சலுகைக் காலத்தைப் பயன்படுத்தி தங்கள் வருமான வரியை செலுத்துமாறு உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவிக்கிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )