சட்டமூலம் மற்றும் 06 அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அங்கீகாரம்

சட்டமூலம் மற்றும் 06 அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அங்கீகாரம்

சட்டமூலம் மற்றும் 06 அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் 02.12.2025ஆம் திகதி கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுவிலேயே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

நீண்ட கலந்துரையாடல்களின் பின்னர் செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் (திருத்தச்) சட்டமூலத்திற்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.

1969ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் 2459/46 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட்பபட்ட ஒழுங்குவிதி, 2002ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க சேர் பெறுமதி வரிச் சட்டத்தின் 6ஆம் பிரிவின் கீழ் 2461/43 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி என்பவற்றுக்கும் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.

அத்துடன், 1962ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க வருமான பாதுகாப்புச் சட்டத்தின் கீழான 2457/06 ஆம் இலக்க வர்த்தமானி மற்றும் 2461/40ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களில் வெளியிடப்பட்ட கட்டளைகள் என்பனவும் இங்கு அனுமதிக்கப்பட்டன.

மேலும், 2011ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க துறைமுக, விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் 3ஆம் பிரிவின் கீழ் 2461/44 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி மற்றும் 2007ஆம் ஆண்டு 48ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 மற்றும் 3 பிரிவுகளின் கீழ் 2457/05 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட கட்டளைகளுக்கும் குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இக்குழுக் கூட்டத்தில் பிரதியமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, நிஷாந்த ஜயவீர, பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )