
அனுராதபுர மாவட்டத்தின் சில பிரதேச செயலாளர் பிரிவுகளில் வீடுகளை சுத்தம் செய்வதற்காக வழங்கப்படும் 25,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டு நிறைவு
அனுராதபுர மாவட்டத்தின் வீடுகளைச் சுத்தம் செய்வதற்காக இந்நிதி தற்போது மாவட்ட செயலகங்களுக்கு வழங்கப்பட்டு நிறைவு பெற்றுள்ளது.
பிரதேச செயலகங்கள் தற்போதும் விரைவாக அவீடுகளை சுத்தம் செய்வதற்கான நிதியை மக்களுக்கு வழங்குவதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், சில பிரதேச செயலாளர் பிரிவுகளில் தற்போது குறித்த நிதி செலுத்தப்பட்டு நிறைவுற்றதாகவும் அனுராதபுர மாவட்ட நிவாரண சேவை நிலையத்தின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
வீடுகளை சுத்தம் செய்வதற்காக அனுராதபுர மாவட்டத்திற்கு 387.475 மில்லியன் ரூபாய் நிதி கிடைக்கப்பெற்றது.
அதில் தற்போது பிரதேச செயலாளர் பிரிவுகளில் 283.4 மில்லியன் ரூபாய் நிதி அனுப்பப்பட்டுள்ளது.
வீடுகளை சுத்தம் செய்யும் நிதியைப் பெற்றுக் கொள்வதற்காக தற்போது அனுராதபுர மாவட்டத்தில் 11 336 குடும்பங்கள் பட்டியல் படுத்தப்பட்டுள்ளன.
ராஜாங்கனை, திறப்பனை, மகவிலச்சிய, கல்நேவ, இபலோகம, பலுகஸ்வெவ போன்ற பிரதேசங்களில் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஏனைய சகல பிரதேச செயலாளர் பிரிவுகளில் வவுச்சர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
அனுராதபுரம் மாவட்ட ஊடகப் பிரிவு

