
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மீதான வழக்குஜனவரி 19 விசாரணைக்கு
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கு ஜனவரி 19 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்க கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டது.
2010 மற்றும் 2012 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் , தனது சட்டப்பூர்வமான வருமானத்தை விட சுமார் 150 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான சொத்துக்களை சட்டவிரோதமாக சம்பாதித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி முகமது மிஹால் முன் அழைக்கப்பட்டபோது , குற்றம் சாட்டப்பட்ட மேர்வின் சில்வாவின் வழக்கறிஞர், இன்று நீதிமன்றத்தில் ஆஜராவது கடினம் என்று கூறினார்,
முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்டு நீதிபதி, மேலதிக சாட்சிய விசாரணையை ஜனவரி 19 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராக இரண்டு சாட்சிகளை அழைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

