‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Rekhas Sri Jewellery 5 மில்லியன் ரூபா நன்கொடை

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Rekhas Sri Jewellery 5 மில்லியன் ரூபா நன்கொடை

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Rekhas Sri Jewellery 5 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கியுள்ளது .

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையையும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்காக தொடங்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு, பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் பரோபகாரிகளிடமிருந்து தொடர்ச்சியாக நன்கொடைகள் கிடைத்து வருகிறது.

அதன்படி, Rekhas Sri Jewellery யினால் 05 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

Rekhas Sri Jewellery சார்பாக, அதன் பணிப்பாளர் ரெங்கசாமி சசிஹரன் (Rengasamy Sasiharan) மற்றும் முகாமையாளர் கே.கே. கேதீஸ்வரன் (K.K. Kedheeswaran ) ஆகியோர் இந்த நன்கொடைக்கான காசோலையை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )