தெற்கில் போதைப்பொருள் ஏற்றி வந்ததாக சந்தேகிக்கப்படும் மீன்பிடி படகு திகோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது

தெற்கில் போதைப்பொருள் ஏற்றி வந்ததாக சந்தேகிக்கப்படும் மீன்பிடி படகு திகோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது

இலங்கைக்கு தெற்கே உள்ள ஆழ்கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதிகளை ஏற்றி வந்த நிலையில் பிடிபட்ட உள்நாட்டு இழுவை படகு தற்போது மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

நேற்று (16) குறித்த படகு நான்கு சந்தேக நபர்களுடன் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டது. இலங்கை கடற்படையின் நீண்டதூர கண்காணிப்பு கப்பல் பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இந்த படகும் மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.

தற்போது துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள இந்த படகில் உள்ள சந்தேகத்திற்குரிய பொதிகள் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன.

அத்துடன், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )