இலங்கையின் அவசர நிதியுதவி கோரிக்கைக்குIMF சர்வதேச நாணய நிதியம் 206 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க ஒப்புதல்

இலங்கையின் அவசர நிதியுதவி கோரிக்கைக்குIMF சர்வதேச நாணய நிதியம் 206 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க ஒப்புதல்

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு, அவசர நிதியுதவி ஏற்பாட்டின் கீழ் இலங்கைக்கு 206 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலிக்க சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு இன்று (19) கூடி, இந்த நிதி வசதியை வழங்க ஒப்புக்கொண்டது.

‘தித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்ய சர்வதேச நாணய நிதியத்திடம் 200 மில்லியன் அமெரிக்க டாலர் அவசர நிதியுதவிவழங்குமாறு இலங்கை அரசாங்கம் கோரியிருந்தது .

இதனடிப்படையில் , நிதியத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்ட விரிவான நிதி கடன் வசதியுடன் கூடுதலாக இந்த நிதி வசதி வழங்கப்படவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) இன் 5வது மதிப்பாய்வு நிறைவடைந்துள்ளது,

மேலும் அதை அங்கீகரிக்க டிசம்பர் 15 அன்று நிர்வாகக் குழு கூட திட்டமிடப்பட்டிருந்தது,

ஆனால் இந்த அவசர நிதி வசதிக்கான கோரிக்கை காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி, இது தொடர்பான கலந்துரையாடல்களை மீண்டும் தொடங்குவதற்காக 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் IMF பணிக்குழு இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )