நாளை கொழும்பில் நீர் வெட்டு

நாளை கொழும்பில் நீர் வெட்டு

கொழும்பின் புறநகர்ப் பகுதிகளில் நாளை காலை 8.30 மணி முதல் மறுநாள் மாலை 4.30 மணி வரை 32 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு 1 முதல் கொழும்பு 15 வரையிலும்,
பத்தரமுல்ல, பெலவத்த, ஹோகந்தர, கொஸ்வத்த, தலவத்துகொட, கோட்டே, ராஜகிரிய, மிரிஹான, மடிவெல, நுகேகொட, நாவல, கொலன்னாவ, ஐடிஹெச், கொட்டிகாவத்த, அங்கொட, வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்த, மஹரகம, பொரலஸ்கமுவ, தெஹிவளை, மொரட்டுவ மற்றும் சொய்சாபுர ஆகிய பகுதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படும்.

இலங்கை மின்சார சபையால் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நீர் விநியோகம் தடைப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )