இலங்கை வந்தடைந்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்

இலங்கை வந்தடைந்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நாட்டை வந்தடைந்தார்.

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சிறப்பு விமானத்தில் நேற்று மாலை சுமார் 5.40அளவில் அவர் நாட்டை வந்தடைந்தார்.

துணை அமைச்சர் ருவான் ரணசிங்க மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் உள்ளிட்ட குழுவினர் அவரை வரவேற்க கட்டுநாயக விமான நிலையம் சென்றனர் .

பிரதமர் நரேந்திர மோடியின் விசேட பிரதிநிதியாக கலாநிதி S ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சர் தனது விஜயத்தின் போது ஜனாதிபதி மற்றும் பிற உயர்மட்ட அரசாங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்திய அரசாங்கம் வழங்கும் ஆதரவை மேலும் உறுதிப்படுத்துவதே இந்திய வெளியுறவு அமைச்சரின் வருகையின் நோக்கம் என்று தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )