
நுகேகொடையில் துப்பாக்கிச் சூடு 25 வயது இளைஞர் காயம்
இன்று (22) இரவு 8.30 அளவில் நுகேகொடை சந்திக்கும் கொஹுவல சந்திக்கும் இடையிலான வீதியில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 25 வயது இளைஞர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,
கல்கிஸ்ஸை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் மற்றும் கொஹுவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

