
ஹெரோயினுடன் ஒருவர் கைது
கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று (24) ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) தலைமையக அதிகாரிகள் குழுவொன்று மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 310 கிராம் ஹெரோயின் போதைப்பொருள், ரூ. 60,000 பணம் மற்றும் ஒரு கார் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர், சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

