சுற்றுலாத்துறையில் சாதனை ; 2018 சாதனையை முறியடித்த 2025

சுற்றுலாத்துறையில் சாதனை ; 2018 சாதனையை முறியடித்த 2025

இலங்கை சுற்றுலாத்துறையில் இன்று (29) வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல் எட்டப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 23 இலட்சத்து 33 ஆயிரத்து 797 ஆக உயர்ந்துள்ளதாக சுற்றுலா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது இலங்கை சுற்றுலா வரலாற்றில் ஒரே ஆண்டில் பதிவான அதிகபட்ச சுற்றுலாப் பயணிகள் வருகையாகும்.

இதற்கு முன்னர் 2018 ஆம் ஆண்டில் பதிவான 23 இலட்சத்து 33 ஆயிரத்து 796 என்ற சாதனையை இந்த ஆண்டின் சுற்றுலாப் பயணிகள் வருகை எண்ணிக்கை தற்போது முறியடித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )