
ஆண்டின் இறுதி நாளில் தங்க விலையில் இருமுறை மாற்றம்
இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலையில் இருமுறை மாற்றம் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 4,000 ரூபாயால் குறைவடைந்த நிலையில் மேலும் 2,000 ரூபாயால் குறைவடைந்துள்ளதாக , இலங்கை நகையக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்தது.
இதன்படி 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 354,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 327,500 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகின்றன.
இந்தநிலையில் 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 40,938 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

