
அமரகீர்த்தி அத்துகோரள கொலை வழக்கு தீர்ப்பு பெப்ரவரி 11-க்கு ஒத்திவைப்பு
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள கொலை வழக்கின் தீர்ப்பை அறிவிப்பதை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கம்பஹா நிரந்தர மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் தீர்மானித்துள்ளது.
இந்த வழக்குடன் தொடர்புடைய விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பை அறிவிப்பதற்கான திகதியை மாற்றியமைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

