நாமலுக்கு எதிரான கிரிஷ் வழக்கு ; அடுத்த மாதம் விசாரணை

நாமலுக்கு எதிரான கிரிஷ் வழக்கு ; அடுத்த மாதம் விசாரணை

கிரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாய் பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கை ஜூன் 27 ஆம் திகதி விசாரணைக்கு முன்னரான கலந்துரையாடலுக்கு அழைக்குமாறு கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (21) கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன முன் விசாரணைக்கு அழைக்கப்பட்டது. இதேவேளை, இந்த வழக்கை ஜூன் 27 ஆம் திகதி விசாரணைக்கு முன்னரான கலந்துரையாடலுக்கு அழைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, ​​குற்றம் சாட்டப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் நீதிமன்றத்தில் ஆஜரானார். 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )