அரிசி தட்டுப்பாட்டை சமாளிக்க இறக்குமதிக்கு அனுமதி ; அமைச்சரவை தீர்மானம்

அரிசி தட்டுப்பாட்டை சமாளிக்க இறக்குமதிக்கு அனுமதி ; அமைச்சரவை தீர்மானம்

நாட்டில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டை சமாளிக்கும் நோக்கில், பொன்னி சம்பா உள்ளிட்ட அதேபோன்ற அரிசி வகைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, ஒவ்வொரு இறக்குமதியாளரும் அதிகபட்சம் 1,040 மெட்ரிக் தொன் அளவுக்கு அரிசி இறக்குமதி செய்ய முடியும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை, உள்நாட்டு சந்தையில் நிலவும் அரிசி பற்றாக்குறையை குறைத்து விலையியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )