
தைவான் – சீனா இணைப்பு தவிர்க்க முடியாதது
1949ஆம் ஆண்டில் சீனாவின் கட்டுப்பாட்டிலிருந்து பிரிந்து தைவான் தனி நாடாக உருவானது.
இருப்பினும், தைவானை இன்னும் தனது நாட்டின் ஒரு பகுதியாகவே சீனா கருதி வருவதுடன், அதனை மீண்டும் சீனாவுடன் இணைப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக சீனா தொடர்ந்து போர்ப்பயிற்சிகளை நடத்தி வருவதால், அந்தப் பகுதியில் பதற்ற நிலை அதிகரித்துள்ளது.
தைவானுடன் எந்த நாடும் தூதரக உறவுகளை பேணக்கூடாது என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், தைவான் எல்லைக்குள் போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அனுப்பி தனது அழுத்தத்தை அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் தைவான் எல்லையைச் சுற்றி சீனா கூட்டு ராணுவப் பயிற்சிகளையும் நடத்தியது.
இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
அந்த உரையில், தைவானை சீனா தனது தன்னாட்சி பிராந்தியமாகவே கருதுவதாகவும், அதனை மீண்டும் சீனாவுடன் இணைப்பது காலத்தின் கட்டாயம் எனவும் தெரிவித்தார்.
மேலும், தைவான் சீனாவுடன் இணைவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த கருத்து சர்வதேச அளவில் மீண்டும் கவனம் ஈர்த்துள்ளது.

