கஞ்சா கலந்த மாவாவுடன் இளைஞர் ஒருவர் கைது

கஞ்சா கலந்த மாவாவுடன் இளைஞர் ஒருவர் கைது

கஞ்சா கலந்த மாவாவை வியாபாரம் செய்த இளைஞர் ஒருவர் யாழ் நாவந்துறையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பொலிஸ் குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நாவந்துறை மண் புட்டி பகுதியில் மேற்கொண்ட சோதனையின் போது 470 கிராம் கஞ்சா கலந்த மாவாவுடன் இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள்  தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் நாவந்துறை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஆவார்

 கைது செய்யப்பட்ட குறித்த இளைஞரிடம் மேற்கொள்ளப்பட்டவிசாரணைகளில் இவர் நீண்ட காலமாக கஞ்சா கலந்த மாவா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக தெரியவருகின்றது

 சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )