கிரெகரி ஏரியில் தரையிறங்க முயன்ற நீர் விமானம் விபத்து

கிரெகரி ஏரியில் தரையிறங்க முயன்ற நீர் விமானம் விபத்து

நுவரெலியா, கிரெகரி ஏரியில் தரையிறங்கத் தயாரான நீர் விமானம் (சீ பிளேன்) ஒன்று இன்று (07) விபத்துக்குள்ளாகி வீழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் விமானத்தில் இருந்த இரண்டு விமானிகள் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் உடனடியாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியாவிற்கு வருகை தந்திருந்த சுற்றுலாப் பயணிகள் குழுவொன்றை ஏற்றிச் செல்லும் நோக்கில் விமானம் வந்திருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளையும், அந்த நேரத்தில் கிரெகரி ஏரியில் படகு சவாரியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீட்டு கரை சேர்த்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தன

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )