
அனர்த்தம் காரணமாக இடைநிறுத்தப்பட்ட உயர் தரப் பரீட்சைகள் ஜனவரி 12 முதல் மீண்டும் ஆரம்பம்
அனர்த்தம் காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பாடங்களுக்கான பரீட்சைகள், எதிர்வரும் ஜனவரி 12ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பரீட்சைகள் ஜனவரி 20ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.
நாடு முழுவதும் 2,086 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைகள் நடத்தப்படவுள்ளதுடன், பரீட்சை நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக 325 ஒருங்கிணைப்பு மத்திய நிலையங்கள் செயற்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனுடன், பரீட்சை விடைத்தாள்கள் சேகரிப்பு மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்காக 32 பிராந்திய சேகரிப்பு மத்திய நிலையங்களும் செயற்பட்டு வருவதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

