
ஜப்பானுக்கு தொழில்நுட்ப பொருட்கள் ஏற்றுமதிக்கு தடை
ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி பதவியேற்றுள்ளார். அவரது பதவியேற்புக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வாழ்த்து தெரிவித்ததுடன், டோக்கியோவுக்கு நேரில் சென்று அவரை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது, சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிராக இரு நாடுகளும் இணைந்து செயல்படுவோம் என இரு தலைவர்களும் கூட்டு அறிக்கையை வெளியிட்டனர்.
இதனைத் தொடர்ந்து, ஜப்பானுக்கு எதிராக செயல்பட்டால் போர் நடவடிக்கை எடுக்கப்படும் என சீனாவுக்கு பிரதமர் சனே தகைச்சி கடும் எச்சரிக்கை விடுத்தார்.
இதன் காரணமாக சீனா–ஜப்பான் இடையேயான இருதரப்பு உறவுகள் கசந்து, வர்த்தக உறவுகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, சீனாவில் இருந்து ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அணுசக்தி உபகரணங்கள், மின்னணு சாதனங்கள், கணினிகள், விமான உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட ராணுவ மற்றும் உயர் தொழில்நுட்ப பொருட்களின் ஏற்றுமதிக்கு சீனா தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

