
சோமாவதிய – சுங்காவில வீதி 8 நாட்களுக்குப் பிறகு மீண்டும் திறப்பு
சோமாவதிய – சுங்காவில வீதி 8 நாட்களுக்குப் பிறகு மீண்டும் நேற்று போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டது.
கடந்த சில நாட்களாக பொலன்னறுவை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள வீதிப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியிருந்ததால், வீதியை மூடுவதற்கு போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
தற்போது படிப்படியாக நிலைமை சீரடைந்து வருவதால், சோமாவதிய புனித தளம் மற்றும் சோமாவதிய விகாரைக்கு செல்லும் வீதி நேற்று பிற்பகல் பக்தர்களால் வழிபாட்டிற்காக திறக்கப்பட்டது.
CATEGORIES Sri Lanka

