
கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 25 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ‘குஷ்’ ரக போதைப்பொருளுடன் நபர் ஒருவர் சுங்க அதிகாரிகளால் நேற்று (02) கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கொண்டு வந்த 4 பயணப் பொதிகளில் இருந்த 16 சைலன்சர்களுக்குள் மிக நுணுக்கமாக மறைத்து இந்த போதைப்பொருள் பதுக்கப்பட்டிருந்தது.
அந்த சைலன்சர்களை பரிசோதித்தபோது, 25 கிலோ 500 கிராம் எடையுடைய ‘குஷ்’ போதைப்பொருள் மீட்கப்பட்டதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
CATEGORIES Sri Lanka

