
அயோத்தியில் மது, இறைச்சி விற்பனைத் தடை
அயோத்தி மற்றும் பைசாபாத் நகரங்களை இணைக்கும் 14 கிலோமீட்டர் நீளமான ராமர் பாதையில், மது மற்றும் இறைச்சி விற்பனையைத் தடை செய்யும் உத்தரவை அயோத்தி நகராட்சி நிர்வாகம் கடந்த ஆண்டு மே மாதம் பிறப்பித்திருந்தது.
அதன்படி, அயோத்தியின் ‘பஞ்சகோசி பரிக்ரமா’ எல்லைகளுக்குள் மது மற்றும் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சில இடங்களில் இந்தத் தடையை மீறி மது விற்பனை நடைபெறுவதாகவும், சில உணவகங்களில் அசைவ உணவு பரிமாறப்படுவதாகவும் உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனைத் தடுக்கும் வகையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES India

