
இரத்தினபுரி சிங்கர் காட்சியறையில் தீ விபத்து
இன்று (16) காலை இரத்தினபுரி – பண்டாரகம பிரதான வீதியில் அமைந்துள்ள சிங்கர் காட்சியறை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தின் காரணமாக காட்சியறையில் இருந்த பொருட்கள் மற்றும் பிற சொத்துக்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

