
அசோக ரன்வலவின் மனைவி கார் விபத்தில் காயம்
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் மனைவி கார் விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு அசோக ரன்வலவின் வீட்டிற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றதாக பியகம போலீசார் தெரிவித்தனர்.
களனி-பியகம வீதியில் உள்ள வீட்டிற்குள் நுழைய முயன்றபோது, களனியில் இருந்து வந்த மற்றொரு கார் அசோக ரன்வலவின் மனைவி ஓட்டிச் சென்ற கார் மீது மோதியது.
எம்.பி.யின் வீட்டில் இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
விபத்தை ஏற்படுத்திய மற்றொரு காரின் ஓட்டுநர் களுத்துறை வடக்கைச் சேர்ந்தவர் எனவும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், விபத்து நடந்த நேரத்தில் அவர் மது அருந்தியிருந்தது தெரியவந்துள்ளது.
CATEGORIES Sri Lanka

