ஹட்டன் குடாகம சந்திக்கு அருகில் லொறியும் வேனும் மோதி விபத்து

ஹட்டன் குடாகம சந்திக்கு அருகில் லொறியும் வேனும் மோதி விபத்து

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில், ஹட்டன் குடாகம சந்திக்கு அருகில் லொறியும் வேனும் மோதி விபத்துக்குள்ளானதில், வேனின் சாரதியும் மற்றுமொரு நபரும் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று பிற்பகல் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது .

காயமடைந்தவர்கள் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டனில் இருந்து குடாகம நோக்கிச் சென்ற லொறி, பிரதான வீதியிலிருந்து இடது பக்கமாகத் திரும்பி குறுக்கு வீதியொன்றுக்குள் நுழைய முற்பட்டபோது , டயகமவிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற வேன் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் லொறியும் வேனும் பலத்த சேதமடைந்துள்ளன.

லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )