பலாலி வீதியில் விபத்து ; இரு முதியவர்கள் காயம்

பலாலி வீதியில் விபத்து ; இரு முதியவர்கள் காயம்

பலாலி வீதி புன்னாலை கட்டு பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது லாரி ஒன்று மோதி நேற்று (05) விபத்து ஏற்பட்டுள்ளது.

இராணுவ வாகனம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இருந்து பலாலி நோக்கி சென்று கொண்டிருந்த போது, இராணுவ வாகனத்தின் பின்னால் வந்த லொறி ஒன்று இராணுவ வாகனத்தை முந்தி செல்ல முற்பட்டவேளை பலாலி பக்கம் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது குறித்த லொறி மோதியது.

இந்த விபத்தின்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு முதியவர்களே படுகாயமடைந்துள்ளனர்.

இச் சம்பவம் குறித்து விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )