
ஹல்துமுல்லயில் பஸ் விபத்து ஓட்டுநர் உயிரிழப்பு பஸ் கதவை மூட முயற்சித்தபோது கட்டுப்பாட்டை இழந்த சாரதி
கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கிச் சென்ற பஸ்ஸோன்று ஹல்துமுல்ல உவதென்ன பகுதியில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது .
விபத்தில் பஸ்ஸின் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பஸ் பயணித்துக்கொண்டிருந்த போது பஸ் ஓட்டுநரின் பக்கமிருந்த கதவு திறந்து கொண்டுள்ளது.
அப்போது ஓட்டுநர் கதவை மூட முயற்சித்த போது பஸ் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள ஒரு தடுப்பில் மோதியதால், பஸ் வீதியில் கவிழ்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் காயமடைந்த பஸ் நடத்துனர், ஒரு சிறு குழந்தை மற்றும் ஒரு பெண் உட்பட மேலும் மூன்று பேர்வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.
விபத்தைத் தொடர்ந்து வீதியின் ஒரு வழிப்பாதை மூடப்பட்டுள்ளதாகவும், விரைவில் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
விபத்து நடந்தபோது ஓட்டுநர் சீட் பெல்ட் அணிதிருக்கவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.

