
யாழில் கஞ்சா பொதி மீட்பு
யாழ்ப்பாணம்- இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேந்தாங்குளம் பகுதியில் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இளவாலை விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று (17) மாலை குறித்த கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது, இரண்டு கிலோக்கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தம்பிதுரை பிரதீபன்

