
இன்று பல பகுதிகளில் வறட்சியான வானிலை
நாட்டின் பல பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் காலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல் , சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் அதிகாலை நேரத்தில் மூடுபனி நிலவ வாய்ப்புள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
CATEGORIES Sri Lanka

